Thursday, August 8, 2019

தொடக்கம்

ஒவ்வொரு காதலின் முடிவில் -
ஒரு அழகிய கவிதையின் ஆரம்பம்

-மணி

Tuesday, May 30, 2017

தொலைத்துவிட்டாய்..!

பெண்ணே தேடாதே - நீ
ஓடி ஒழிந்த நொடிகளில் தொலைத்துவிட்டாய்
உனக்கான என் இதயத்தை..!
எங்கோ ஒரு முட்பாதையில்...!!
-மணி

பயணங்கள் முடிவதில்லை

ஒரு முடிவில்
தொடங்கிய நம் பயணம்
மீண்டும் ஒரு தொடக்கத்தால்
முடிகிறது..
இப்படிக்கு 
நான்..!!
-மணி

காதல் - ஒரு பெண்ணின் பார்வையில்

பெண்..
அந்த ஒரு சொல்லின் அர்த்தம் 
உணர்ந்தேன் -
உன்னிடம் காதல் சொன்ன 
நொடியில்

-மணி 

Thursday, April 13, 2017

தவுறு

உன் ஞாபகம் தீண்டியபோதெல்லாம் 
என் கவிதைகளும் 
உன் குறுந்செய்திகளும் 
பலமுறை உயிர் பெற்றன - என் 
தவுறுகளை மட்டும் சுட்டிக்காட்ட... :( 

-மணி

Friday, February 17, 2017

சொக்கிவிட்டாயடி என்னை...!

ஏய் பெண்ணே...
சொக்கிவிட்டாயடி என்னை...!
விரதம் கலைந்த முனி ஆனேன்-
உன் அழகை ரசித்தவுடன்..!
காதல் கரைபுரளும் -
சேர்ந்திருந்தால்..!!
காமம் எல்லை மீறும் -
விறல் தீண்டலில்..!!!
இருந்தும் ஒரு மெல்லிய கோடு
நமக்குள்....ஏன் ???
உறவு தெரியவில்லை...உயிர் மட்டும்
தருகிறேன் - பாதுகாத்துக்கொள்.. !!

-மணி

Tuesday, December 6, 2016

என்றென்றும் காதல்

வழிந்தோடும்  உன் காதலில்
நான் தொலைந்து போனேன் இன்று !

அக்னி சுற்றி உன் விரல் பிடிப்பேன்

ஒரு நல் திங்களில் !!

வருடங்கள் ஓடி தோல் சுருங்கி

மீசை நரைத்திடும் - ஆனாலும்

நம் காதல் மட்டும் புது

பிறவி கொள்ளும் தினமும் !!!
என்றும் 16 போல்..

என் காதலே - உன்னை

காதலிப்பேன் என்றும்