Friday, August 21, 2015

இதயம் இல்லை

நெஞ்சில் ஒரு பயம்..!
பிரிந்து சென்ற நீ
எங்கு
திரும்பி வந்துவிடுவாயோ என்று -காரணம்
உன்னை
வெறுப்பதால் அல்ல ..!!
மீண்டும் ஒரு தோல்வியை
ஏற்க என் இதயம்
இல்லை

நீயா

நீ செய்த காதலும்
என் மீது நீ கொண்ட அன்பும்
இன்று நான் பார்க்கும்
உன்னிடமா கண்டேன் அன்று -
எத்தனை குணாதிசயம்
இந்த பெண்ணின்
இதயத்தில..!!

பள்ளி பாடம்

கல்வியோடு
காதல் தோல்வியும்
சொல்லி கொடுக்கவேண்டும்
இப்பள்ளிகளில் -
அப்பொழுது மட்டும் தான்
காதல் தோல்விகள்
குறையும்

ஒரு ஆணும் புத்திசாலி ஆவான்

மீண்டும் காதல்

நம் சந்திப்பு
உன் நினைவில் இல்லை
பின் ஏன் பிரிந்தது மட்டும்
நினைவில் கொண்டிருக்கிறாய் பெண்ணே
உன்னை மீண்டும் காதல் செய்ய 

ஒரு வழியையும் நீயே சொல்லிவிடு -
இம்முறை உன் நினைவில் நான்
வாழ்வேன் எப்பொழுதும்

சூசகம்

கண்ணாம்பூச்சி விளையாட பிடிக்கும் என்றாய் !
அது
என் கனவிலும்
என் நினைவிலும் -
ஒளிந்து விளையாட என்பதை தான்
அப்படி சூசகமாய் சொன்னாய
பெண்ணே..!!

Wednesday, August 5, 2015

நிழல்

நிழல் போல வந்தாய்..
நிஜம் என்று நம்ப செய்தாய்..
உயிரில் பங்கு போட்டாய்..
என் உறவு நீ தான் என்றாய்..
இன்று..??
இருளில் விலகும் நிழல் போல
நீயும் மறைந்துவிட்டாய்
பெண்ணே..!!!

வாழலாம்

வாழலாம்
என்று சொல்லிவிட்டு
இன்று - நீ
வாழ்கிறாய் ஒருவருடன்
நான் வாழ்கிறேன்
உன் நினைவுகளில்

அறிகுறிகள்

நாணம் கொண்டாய்..
விரல் கடித்தாய்..
வெட்கி தலை குனிந்தாய்..
காலில் கோலமிட்டாய்..!
இத்தனை அறிகுறிகள் - என்னை
காதல் செய்கிறாய் என்று
ஆனால்
விட்டு செல்லும் போது மட்டும்
எதுவும் சொல்லவில்லையே..!!

Tuesday, August 4, 2015

ஒற்றுமை

பெண் - பொய்
இரண்டுக்கும் ஓர் எழுத்து வித்தியாசம்
ஆனால் - அதன் பொருளில்
நூறு சதவிதம் ஒற்றுமை

Thursday, July 30, 2015

காட்டு தீ

காட்டு தீ போல் தான் மனமும்..!
அவள் விட்டு சென்ற
காதல் தீயை
அனைக்க போராடுகின்றது
வலியோடு வழி தெரியாமல்..!!

Wednesday, July 29, 2015

இது காதலா ??

களவு மனம் புரிந்த காதல்
எதுவுமே
திருமணம் செல்ல மறுக்கின்றது
காரணம் கேட்டால்
அன்று பிடித்தது இன்று இல்லை
என்றொரு பதில்
இது தான் காதலா ??
வெறும் கண் கட்டி வித்தை
எல்லாம் இன்று

தூக்க மாத்திரை

தூக்க மாத்திரைகளில் உள்ளது
நாம் காதல்..
ஆம் பெண்ணே !! அந்த உறக்கத்தில் மட்டும் தான்
நீ வருகிறாய் என் கனவில்!!
அதனால் தான் அதிகம் சாப்பிட்டுவிட்டேன் - நீ
என்னுடனே இருந்து விடுவாய் என்று

காலாவதி

காலாவதி தேதி குறிப்பிடவில்லை
உன் காதலில்
பார்த்திருக்க வேண்டுமோ அதை நான்
இவ்ளோ சீக்கிரம்
காலாவதி ஆகிவிட்டதே நாம் காதலும்

பெண்ணின் காதல்

பருவம் நிறைந்து காத்திருந்தேன்
உனக்காக தான்..!
உலகம் சுற்றி சொல்வோம்
நாம் காதலர்கள் என்று
எனக்காக பிறந்தவன் நீ என்று
என் பெண்மையை உணர்த்தியவன் நீ என்று
என்னுள் தாய்மையை புகுத்தியவன் நீ என்று
என்னை மட்டும் நேசி
நாம் இருவரும் காதலை மட்டும் நேசிப்போமாக..!!

யார் அவன்

கேட்பார் இல்லை
என் சிறு வயது நண்பர் கூட்டத்தை..
பருவம் அடைந்தேன்-கூடவே
கேள்விகளும் வளர்ந்தது
அதில் ஒன்று தான் -
யார் அவன் என்று

பணிந்தேன்

அந்த விஜயனின் அம்பு கூட
உன் முன் பணியும் பெண்ணே..!
நான் மட்டும் என்ன - வெறும் அற்ப
மனிதன் தானே !!
அதனால் தான் உடனே விழுந்துவிட்டேன்
உன் காதலில்

பிழை

பிழை ஒன்று  செய்தேன்
உன்னை நிமிர்ந்து பார்த்து !
நீ தலை குனிந்த அந்த நொடி
நான் உயிர் துடித்தேன்
என் மிச்ச நொடிகள் - உன்னை
மறுபடி மறுபடி பார்க்க ஏங்கின !!
காதலின் வலி நானும் உணர்ந்தேன்
அந்த நொடி !!!

காதலே

உணர்வு மட்டுமே உண்டு
உன்னை தொடவும் இல்லை
பார்க்கவும் இல்லை நான்..
ஆனாலும் உனக்காக உயிர் தர துணிவு
அதனால் தான் என்னமோ உலகம் தோன்றி
இன்று வரை நீ மட்டும்
மாறவும் இல்லை- அழியவும் இல்லை
காதலே...நானும் உனது ஓர் அடிமை தான்

சக்தி

உருவமில்லா ஓர் உயிர்கொல்லி
விஞ்ஞானம் சாதிக்க முடியா ஒன்று
மன்னர்கள் வெல்ல முடியாத ஒரு யுத்தம்
கண்டங்கள் பல கடந்தும் -
ஒளிந்து கொள்ள முடியாது
அடிமைகள் தான் எல்லோரும் இந்த சுதந்திர
பூமியில் - இந்த காதலுக்கு

கண் இல்லை

காதலுக்கு
கண் இல்லை தான்
அதனால் தான் என்னமோ
என் காதல் கூட தெரியவில்லை
அவள் கண்களுக்கு

வாலி

பெண்ணும் வாலி போல தான்
அவன் எதிரியின் சக்தியில் பாதி வென்றான்
இவளோ
ஒரு பார்வையில்
ஆணின் மொத்த உயிரையும்
உறுவி செல்கிறாள்

Tuesday, July 28, 2015

உன்னோடு ஒரு பயணம்

பேருந்துக்கு
நீ காத்திருந்து
நான் வாங்கிய திட்டுகள்..
ஏறிய நொடி முதல்
உன் பிள்ளை சிணுங்கல்கள்..
செல்ல செல்ல உன் ஊடல்கள்..
பின் ஊடல் கனிந்து கூடல்..
இடம் நெருங்க நாம் நெருங்க..
தடை இன்றி கடந்தேன் உன் உதட்டின் எல்லைகள்..
பயணம் நீள்கிறது உன் உதட்டில்..
இடம் சேர்ந்து..பிரிந்தோம் அன்று..
இன்று சிந்தனையில் நீ மட்டும்
என் ஒவ்வொரு பயணத்திலும்...

நிம்மதி ????

நிம்மதி இல்லை தொலைத்த நொடி முதல்
நான் தொலைத்தது பொருள் என்றால்
உலகின் எல்லை சென்றும் வாங்கிருப்பேன்
ஆனால் நான் தொலைத்தது
உன் இதயத்தை அல்லவோ பெண்ணே..!
எங்கு சென்று தேடுவேன் அதை -  என்னவளே
வந்துவிடு என்னிடம் மீண்டும்..!!
இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்....!!!

ஏமாற்றம்

எங்கு சென்றாலும்
உன்னிடம் திரும்புவேன் என்றாய்..
அதனால் தான் என்னமோ
நீ மணவறை வரைக்கும் சென்றாலும்
என்னிடம் திரும்பவருவாய் என்று நம்பிவிட்டேன்..!
அட்சதை தூவி வெளிவரும் போது
ஒரு துளி கண்ணீர் மட்டும் என்னுடன்...!!!

தோழியே உனக்காக


"காதல் இல்லை...காமம் இல்லை..
வெறும் நட்பு மட்டுமே..!!
கலங்கிடும் உன் கண்களில்
புன்னகைக்கும் உன் இதழில்
உருகும் உன் இதயத்தில்
என ஒவ்வொன்றிலும் சிலிர்க்கிறேன்
எனக்கான உன் நட்பினை கண்டு...!!!
விதி என்று ஒன்று இருந்தால்
சொல்வோம் தோழி - நம் பிள்ளைகளிடம்
இது தான் நட்பின் இலக்கணம் என்று - நம்
தள்ளாத வயதிலும்"

மகளிடம் ஓர் கேள்வி

"நீ பிறந்த நொடி முதல் 
     நான் கர்வம் கொண்டேன்.. 
நீ செய்த ஒவ்வொரு குறும்பும் 
     ஒரு சாகசம் தான் எனக்கு.. 
மாற்றான் விரல் பிடித்தும் கூட என் 
     செல்ல மகள் இன்னும் குழந்தை தான் 
நீ பெற்ற குழந்தையிலும் கூட.. 
     உன் பிம்பம் மட்டுமே காண்கிறேன் 
சொல் மகளே - என் விழி மூட.. 
     உன் கணவனுக்கு நீயும் ஓர் பிள்ளை என்று"

Wednesday, February 4, 2015

தனிமை

தனிமை புதிது அல்ல 
நான் ரசிக்கும் தனிமையில் என்னை உணர்வேன் என்றும் !!
இன்றோ....
என் தனிமை முழுவதும் நீ மட்டும்...! 
என்ன செய்தாய் பெண்ணே என்னை ???

மடல் ஏறுதல்

சங்க காலம்
மடல் ஏறுதல் ஒரு சோக சடங்கு....
இந்த காலம் 
எனக்கு மடல் ஏற துணிவில்லை !!
அமைதியில் மறைகிறேன்...
தனிமையில்... 
உன்னை விட்டு....   

வானவில்

வானவில் போல் தான் நீயும்..! 
     சில காலம் இருந்து பின் 
மறைந்துவிட்டாய் - சென்ற இடம் 
     யாரும் அறியார் இவ்வுலகில்..... 

சந்தியாகாலம்

சந்தியாகால மேகமும் 
     இவளும் ஒன்று தான்...
இருள் சூழவும் 
     விட்டு செல்கிறாள்.....

கானல் நீர்

காதலும் கானல் நீரும் ஒன்று.......  
தேடி செல்ல செல்ல விட்டு செல்லும் ! 
தேடல் தவறில்லை - ஆனால் 
பாலைவன தேடல் முட்டாள்தனம்..... :(

-மணி

தொலைத்தது

நிமிடங்கள் தொலைந்தன 
     உன் அருகில் இருந்தபோது ....
நான் தொலைத்தது 
     அந்த 
நிமிடங்களை மட்டுமல்ல 
      என்னையும் சேர்த்துதான் பெண்ணே...