Thursday, May 30, 2013

காதல் - சாபம்

கல்லூரியில் ஒரு கூட்டமே உன் பின் சுற்றியது 
ஆனால் நீயோ - 
சுற்றியது என்னோடு 

எட்டு மாதங்கள் காத்திருந்து 
என் காதலை சொன்னேன் - நீயோ 
இல்லை என்று சொல்லிவிட்டு சென்றாய் 
மீண்டும் இரண்டு மாதங்கள் சென்று 
உன் காதல் சொன்னாய் என்னிடம் !
ஒரு பிரசவம் தரித்த சந்தோஷம் 
மனதுக்குள் 

திமிர் பிடித்தவள் தான் நீ 
உன்னை விட நான் - அதனால் தான் 
காதல் நம்மை திமிறி சென்றுவிட்டது 
இரண்டு மாதத்தில் !!

மொத்தம் வெறும் பன்னிரெண்டு மாதங்கள் தான் 
ஆனால் இத்தனை ஆண்டுகள் சென்றும் 
எங்கோ ஒரு மூலையில் நீ - என்றும் 
என் நினைவில் வந்து செல்கிறாய் 

எப்பொழுது முடியும் நான் பெற்ற
இந்த பன்னிரெண்டு மாத சாபம்..???