Monday, December 12, 2011

மெருகு

அடி என்னவளே..!
நாளுக்குநாள் என் கவிதைகளும் மெருகேறுகின்றது -
நீ என்னை விலகி செல்ல செல்ல ...!!

Friday, December 9, 2011

வேல் விழி

"வரவர காதலும் பிடிக்கவில்லை !
காதலர்களும் பிடிக்கவில்லை !
உலகம் வெறுமையாக தெரிகின்றது !
ஏனென்று புரியவில்லை !
கேள்வி கேட்கவும் யாருமில்லை !
பதில் சொல்ல சங்க புலவர்களும் இல்லை !
இதெலாம் காதலின் அறிகுறி என்று இலக்கியம் சொன்னது ? 
இல்லை என்று முறையிட்டேன் கடவுளிடம்- அவர் சிரிக்கிறார் !!
இத்தனை கேள்விகளுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும் என்று சந்தேகம் 
எனக்குள் - கடைசியில் 
விடை சொன்னால் ஒரு மாது 
தன்னுடைய வேல் விழிகளால்"

Tuesday, December 6, 2011

காதல்

"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான் 
என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!
விதி யாரை விட்டது இங்கு-இன்று 
தனியே பேசி செல்கிறேன் 
யாரும் இல்லா ஒரு சாலையில் 
அவளை பற்றி"

புன்னகை

"இதயத்தை கீறிவிட்டு 
வருத்தபடாதே என்கிறாள்-இருந்தும் 
புன்னகை பூக்கிறேன்
என்னவளுக்காக"