இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Wednesday, February 4, 2015
தனிமை
தனிமை புதிது அல்ல
நான் ரசிக்கும் தனிமையில் என்னை உணர்வேன் என்றும் !!
இன்றோ....
என் தனிமை முழுவதும் நீ மட்டும்...!
என்ன செய்தாய் பெண்ணே என்னை ???
மடல் ஏறுதல்
சங்க காலம்
மடல் ஏறுதல் ஒரு சோக சடங்கு....
இந்த காலம்
எனக்கு மடல் ஏற துணிவில்லை !!
அமைதியில் மறைகிறேன்...
தனிமையில்...
உன்னை விட்டு....
வானவில்
வானவில் போல் தான் நீயும்..!
சில காலம் இருந்து பின்
மறைந்துவிட்டாய் - சென்ற இடம்
யாரும் அறியார் இவ்வுலகில்.....
சந்தியாகாலம்
சந்தியாகால மேகமும்
இவளும் ஒன்று தான்...
இருள் சூழவும்
விட்டு செல்கிறாள்.....
கானல் நீர்
காதலும் கானல் நீரும் ஒன்று.......
தேடி செல்ல செல்ல விட்டு செல்லும் !
தேடல் தவறில்லை - ஆனால்
பாலைவன தேடல் முட்டாள்தனம்..... :(
-மணி
தொலைத்தது
நிமிடங்கள் தொலைந்தன
உன் அருகில் இருந்தபோது ....
நான் தொலைத்தது
அந்த
நிமிடங்களை மட்டுமல்ல
என்னையும் சேர்த்துதான் பெண்ணே...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)