Wednesday, December 19, 2012

நம்பாதே!!


பெண்ணை நம்பாதே...
விட்டு சென்றுவிடுவாள் என்றான்- மொழிகூட 
தோன்றா காலம் முதல்
இருந்தும் என்ன பயன் !! இந்த மனம் 
அவளையே சுத்தி செல்கிறது 
பின்வரபோவதை அறிந்திருந்தும் 

Tuesday, December 18, 2012

குழப்பம்


பெண்ணே !
என்னோடு பேசும்போது 
பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன் என்றாய் !!
ஒரு நொடியில் ஒரு சொல்லில் 
என் மீது நீ கொண்ட காதலை அழகாக
இப்படி சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிட்டாய் !!!

அதன் வலி என்னவென்று உணராமல்..........

Monday, December 17, 2012

முதல் முத்தம்

நீ தரும் ஒவ்வொரு முத்தமும் 
ஏன் எனக்கு மட்டும் 
உன்னிடம் நான் 
முதல் முறை வாங்கும் முத்தமாகவே தோன்றுகிறது 
இது தான் காதலுக்கு அடையாளமோ

Tuesday, October 16, 2012

பிச்சை


ஒரு பெரிய மனிதன்
பிச்சை கேட்ட ஒரு சிறுமியை ஏளனமாக பார்த்துவிட்டு 
தன் காரில் ஏறி செல்கிறார் - அந்த 
கார் சென்று மறையும் வரை பார்க்கிறாள் சிறுமி 
"ஏளனமாக"

Monday, October 15, 2012

அழகான ராட்சஸி

காற்றுக்குகூட தெரியாது அவளின் புன்னகை சத்தம்..!
நிலவுகூட  அவளை  கண்டால்  ஒளிந்து கொள்ளும்...!
நீரும்  அவள்  விரல்படும்போது சிளிர்த்துகொள்ளும்...!
அவள் பாதம் பட பூமியும் கிறுகிறுக்கும் ....!
நெருப்பும் அவளை கண்டு உருகும்..!
இவை எல்லாம் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி ??
யார் இவள் என்றா ..??
இல்லை ....இந்த ஜந்து யார் என்று தான்?? (ஹஹா )
என்  பதிலோ.....
இந்த அழகான ராட்சஸி - என் சிநேகிதி என்று !

Tuesday, September 25, 2012

பெண்ணின் ஆயுதம்

புலவர்கள் ஏன் இந்த பெண்களின் விழிக்கு இத்தனை முக்கியத்துவம் தந்தார்கள் என்று இப்பொது புரிகிறது ... 
இரு விழி --ஒரு சொட்டு கண்ணீர் ..
ஆயிரம் மொழி பேசுகிறது 
காதல் சொல்கிறது
ஊடல் செய்கிறது
கோபம் பொழிகிறது
கவிதை புனைகிறது
அடிமை படுத்துகிறது
பலவீனம் செய்கிறது
இன்பம் தருகிறது
வெட்கம் அடைகிறது
வீரம் கொள்கிறது
அப்பப்பா...
இந்த பெண்களின் இரு வேல்களுக்கு 
எந்த மன்னாதி மன்னனும் அடிமை தான் கடைசிவரை ...
நான் மட்டும் என்ன விதிவிலக்கா !!!

Monday, September 24, 2012

கவிதை பஞ்சம்

அன்று 
பதிவு செய்யாமல் கிழித்த கவிதைகள் அதிகம்  
இன்று 
பதிவு செய்ய நினைக்கிறன்...
கவிதைகள் இல்லை என்னிடம் 
பெண்ணே நீ இல்லாததால்

புத்தகங்கள்

காதலி விட்டுச் சென்ற தனிமையை 
சோழனும் பாண்டியனும் ஆக்கிரமித்து கொண்டார்கள் 
எத்தனை இன்பம் இந்த புத்தகத்தில்
இவர்களுடன் நான் செல்லாத தூர தேசங்களே இல்லை-
நான் செய்யாத போர்கள் இல்லை-
ஆயிரம் பெண்களை காதல் செய்திருப்பேன் இதுவரை-
வீரம்,காதல்,கவிதை,கற்பனை,கோபம்,அறிவு 
என்று எத்தனை எத்தனை சுகங்கள் இந்த பக்கங்களில்!!
என்னவளே.....என் நன்றிகள் உனக்கு 
விட்டு சென்றதுக்கு என்னை

தோழி

தன்னை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு கேட்டால் அவள் - 
என்ன எழுதுவேன் நான்...தெரியவில்லையே !!!
சரி...உனக்கான என் ஒரு வரி கவிதை 
                  " நன்றி தோழி "

கற்பனை

காதலி மட்டும் தானே என்னை விட்டு சென்றால்...
என் கற்பனை கூடவா என்னை விட்டு  சென்று விட்டது ???
ஒரு கவிதை எழுத இத்தனை நிமிடம் 
யோசிக்கிறது என் மனம் !!

Tuesday, August 7, 2012

கனவு

கனவில் காதலி வருவது ஒரு தனி சுகம்..
அதுவும் பிரிந்தவள் வந்து உன்னை பார்க்கும்போது- இந்த 
உலகம் தேவையில்லை!
வெறும் கனவே போது என சொல்வாய் 
என்னை போல - வருத்ததுடன் !! ஆனால் 
அந்த கனவும் அவளை போலவே தான்!
உடனே களைந்து சென்றுவிட்டது..



Thursday, March 29, 2012

கண்ணனின் மனம்

"ஆயிரம் கோபியர்கள் சூழ இருந்தும் 
அந்த கண்ணனின் மனம் ராதையை தான் தேடியது - இந்த 
கண்ணனின் மனமும் கூட ராதையை தான் தேடுகிறது !
ஆனால் என்னுடைய ராதைக்கு தான் அது 
புரியவில்லை போலும் !!"

Wednesday, March 7, 2012

தலைவலி

காதலித்தபோது தான் தனியே பேசி சென்றேன் என்றால்...
இன்று வேலை பார்க்கும் போதும் அதே நிலைமை!
வித்தியாசம் ஒன்றும் பெரிது அல்ல-
இரண்டுமே தலைவலி தான்!!

Tuesday, February 7, 2012

மௌனம்

"உன்னிடம் பேச நினைக்கும் போது மட்டும் 
ஏன் இந்த மாற்றம் எனக்குள் !!!
எதோ இந்த உலகில் மொழியே பிறக்காத ஒரு உணர்வு !
கண்கள் தவிர உடலில் வேறு இயக்கம் இல்லை !!
உன் அசைவுகளில் ஒவ்வொன்றிலும் போர்களம் சென்ற வந்த தாக்கம் !!!
நீ என்ன தேவதைய-இல்லை என்னை தேடி வந்த
தனி ஒரு உலகமா ??
அந்த பிரம்மனை தேடுகிறேன் - உன்னை பற்றி விடை தெரிய" 

Sunday, February 5, 2012

அதிர்ச்சி

"ஒரு அதிர்ச்சி
லேசான மயக்கம்...அதிகரித்த  இதயத்துடிப்பு...
இத்தனையும் ஒரு வினாடியில் நடந்து முடிந்தது 
உனக்கு திருமணம் என்று கேட்ட நொடியில்"



Tuesday, January 24, 2012

பாதை

அடி என்னவளே!
என் நாடி நரம்புகளில்கூடவா உன் காதல் கலந்துள்ளது ???
என் கால்கள் கூட நீ சென்ற பாதையில்
செல்ல துடிக்கின்றதே இப்படி!!!

Monday, January 23, 2012

கண்ணீர்

"அன்று 
நீ சிந்திய கண்ணீரில் கண்டேனடி 
உன் காதலின் உயரத்தை- 
இன்று 
நான் சிந்தும் கண்ணீரில் மட்டும் 
உனக்கேன் அது புரியவில்லை பெண்ணே ??"

Friday, January 20, 2012

தேடல்

"உறவுகள் சூழ்ந்து நின்றாலும் 
விழி ஓரத்தில் ஒரு தேடல்-
எங்காவது நீ நிர்க்கமாட்டாய என்று "

Wednesday, January 4, 2012

தோல்வி

"ஓவ்வொரு முறையும் 
தோல்வி தான் பெண்ணே எனக்கு -
உன் விழி பார்க்காமல் செல்ல நினைக்கையில் "