களவு மனம் புரிந்த காதல் எதுவுமே திருமணம் செல்ல மறுக்கின்றது காரணம் கேட்டால் அன்று பிடித்தது இன்று இல்லை என்றொரு பதில் இது தான் காதலா ?? வெறும் கண் கட்டி வித்தை எல்லாம் இன்று
தூக்க மாத்திரைகளில் உள்ளது நாம் காதல்.. ஆம் பெண்ணே !! அந்த உறக்கத்தில் மட்டும் தான் நீ வருகிறாய் என் கனவில்!! அதனால் தான் அதிகம் சாப்பிட்டுவிட்டேன் - நீ என்னுடனே இருந்து விடுவாய் என்று
பருவம் நிறைந்து காத்திருந்தேன் உனக்காக தான்..! உலகம் சுற்றி சொல்வோம் நாம் காதலர்கள் என்று எனக்காக பிறந்தவன் நீ என்று என் பெண்மையை உணர்த்தியவன் நீ என்று என்னுள் தாய்மையை புகுத்தியவன் நீ என்று என்னை மட்டும் நேசி நாம் இருவரும் காதலை மட்டும் நேசிப்போமாக..!!
பிழை ஒன்று செய்தேன் உன்னை நிமிர்ந்து பார்த்து ! நீ தலை குனிந்த அந்த நொடி நான் உயிர் துடித்தேன் என் மிச்ச நொடிகள் - உன்னை மறுபடி மறுபடி பார்க்க ஏங்கின !! காதலின் வலி நானும் உணர்ந்தேன் அந்த நொடி !!!
உணர்வு மட்டுமே உண்டு உன்னை தொடவும் இல்லை பார்க்கவும் இல்லை நான்.. ஆனாலும் உனக்காக உயிர் தர துணிவு அதனால் தான் என்னமோ உலகம் தோன்றி இன்று வரை நீ மட்டும் மாறவும் இல்லை- அழியவும் இல்லை காதலே...நானும் உனது ஓர் அடிமை தான்
உருவமில்லா ஓர் உயிர்கொல்லி விஞ்ஞானம் சாதிக்க முடியா ஒன்று மன்னர்கள் வெல்ல முடியாத ஒரு யுத்தம் கண்டங்கள் பல கடந்தும் - ஒளிந்து கொள்ள முடியாது அடிமைகள் தான் எல்லோரும் இந்த சுதந்திர பூமியில் - இந்த காதலுக்கு
பேருந்துக்கு நீ காத்திருந்து நான் வாங்கிய திட்டுகள்.. ஏறிய நொடி முதல் உன் பிள்ளை சிணுங்கல்கள்.. செல்ல செல்ல உன் ஊடல்கள்.. பின் ஊடல் கனிந்து கூடல்.. இடம் நெருங்க நாம் நெருங்க.. தடை இன்றி கடந்தேன் உன் உதட்டின் எல்லைகள்.. பயணம் நீள்கிறது உன் உதட்டில்.. இடம் சேர்ந்து..பிரிந்தோம் அன்று.. இன்று சிந்தனையில் நீ மட்டும் என் ஒவ்வொரு பயணத்திலும்...
நிம்மதி இல்லை தொலைத்த நொடி முதல் நான் தொலைத்தது பொருள் என்றால் உலகின் எல்லை சென்றும் வாங்கிருப்பேன் ஆனால் நான் தொலைத்தது உன் இதயத்தை அல்லவோ பெண்ணே..! எங்கு சென்று தேடுவேன் அதை - என்னவளே வந்துவிடு என்னிடம் மீண்டும்..!! இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்....!!!
எங்கு சென்றாலும் உன்னிடம் திரும்புவேன் என்றாய்.. அதனால் தான் என்னமோ நீ மணவறை வரைக்கும் சென்றாலும் என்னிடம் திரும்பவருவாய் என்று நம்பிவிட்டேன்..! அட்சதை தூவி வெளிவரும் போது ஒரு துளி கண்ணீர் மட்டும் என்னுடன்...!!!
"காதல் இல்லை...காமம் இல்லை.. வெறும் நட்பு மட்டுமே..!! கலங்கிடும் உன் கண்களில் புன்னகைக்கும் உன் இதழில் உருகும் உன் இதயத்தில் என ஒவ்வொன்றிலும் சிலிர்க்கிறேன் எனக்கான உன் நட்பினை கண்டு...!!! விதி என்று ஒன்று இருந்தால் சொல்வோம் தோழி - நம் பிள்ளைகளிடம் இது தான் நட்பின் இலக்கணம் என்று - நம் தள்ளாத வயதிலும்"
"நீ பிறந்த நொடி முதல் நான் கர்வம் கொண்டேன்.. நீ செய்த ஒவ்வொரு குறும்பும் ஒரு சாகசம் தான் எனக்கு.. மாற்றான் விரல் பிடித்தும் கூட என் செல்ல மகள் இன்னும் குழந்தை தான் நீ பெற்ற குழந்தையிலும் கூட.. உன் பிம்பம் மட்டுமே காண்கிறேன் சொல் மகளே - என் விழி மூட.. உன் கணவனுக்கு நீயும் ஓர் பிள்ளை என்று"