கல்லூரியில் ஒரு கூட்டமே உன் பின் சுற்றியது
ஆனால் நீயோ -
சுற்றியது என்னோடு
எட்டு மாதங்கள் காத்திருந்து
என் காதலை சொன்னேன் - நீயோ
இல்லை என்று சொல்லிவிட்டு சென்றாய்
மீண்டும் இரண்டு மாதங்கள் சென்று
உன் காதல் சொன்னாய் என்னிடம் !
ஒரு பிரசவம் தரித்த சந்தோஷம்
மனதுக்குள்
திமிர் பிடித்தவள் தான் நீ
உன்னை விட நான் - அதனால் தான்
காதல் நம்மை திமிறி சென்றுவிட்டது
இரண்டு மாதத்தில் !!
மொத்தம் வெறும் பன்னிரெண்டு மாதங்கள் தான்
ஆனால் இத்தனை ஆண்டுகள் சென்றும்
எங்கோ ஒரு மூலையில் நீ - என்றும்
என் நினைவில் வந்து செல்கிறாய்
எப்பொழுது முடியும் நான் பெற்ற
இந்த பன்னிரெண்டு மாத சாபம்..???
No comments:
Post a Comment