காதலி விட்டுச் சென்ற தனிமையை
சோழனும் பாண்டியனும் ஆக்கிரமித்து கொண்டார்கள்
எத்தனை இன்பம் இந்த புத்தகத்தில்
இவர்களுடன் நான் செல்லாத தூர தேசங்களே இல்லை-
நான் செய்யாத போர்கள் இல்லை-
ஆயிரம் பெண்களை காதல் செய்திருப்பேன் இதுவரை-
வீரம்,காதல்,கவிதை,கற்பனை,கோபம்,அறிவு
என்று எத்தனை எத்தனை சுகங்கள் இந்த பக்கங்களில்!!
என்னவளே.....என் நன்றிகள் உனக்கு
விட்டு சென்றதுக்கு என்னை
No comments:
Post a Comment